Categories
மாநில செய்திகள்

நாளை(செப்.27) முதல்… தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்களுக்கான கலந்தாய்வு…!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் வருடம் தோறும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அது பற்றி ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளது. அதனால் பணி மாறுதல் கலந்தாய் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாளை பள்ளிக்கல்வித்துறையில் ஒரே அலுவலகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை மாறுதல் செய்ய கலந்தாய்வு நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் இந்த கலந்தாய்வில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அனைத்து அலுவலகங்களும் எந்தவிதமான புகார் இன்று செயல்பட வேண்டும் எனவும் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் 3 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வரும் மாவட்ட கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் போன்றவருக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நிதி காப்பாளர் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்ந்த பட்டம் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் மாவட்டம் உள்ளையே மாறுதல் பெற நாளை கலந்தாய்வு நேர்முக உதவியாளர் கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் மாவட்டம் விட்டு மாவட்டம் பெற செப்டம்பர் 28ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என கூறப்பட்டிருக்கிறது.

மேலும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்றோர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கலந்தாவின் படி ஒரே மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து பணியாளர்களும் மற்ற அலுவலகங்களுக்கு மாற வேண்டும் எனவும் பிற பணியாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |