இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ரிசர்வ் வங்கி நிதிநிலமை சரியில்லாத வங்கிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த லட்சுமி கூட்டுறவு வங்கியினுடைய உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சுமி கூட்டுறவு வங்கியில் போதிய மூலதனம் இல்லை. இந்த நிறுவனம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை.
எனவே லஷ்மி வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கூட்டுறவு வங்கியின் 99% வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்திரவாத நிறுவனத்திடம் இருந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் லட்சுமி கூட்டுறவு வங்கி தொழில் செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.