சிவபெருமான் எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும் சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன் பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரராகி, பல நன்மைகளைப்பெறுகின்றனர். ஏனெனில் சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
- வலம்புரிச் சங்கு அபிஷேகம் : வலம்புரிச் சங்கு அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
- கரும்புச் சாறு அபிஷேகம் : கரும்பு சாறினால் அபிஷேகம் செய்தால் நோய்நொடிகள் நீங்கி, ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.
- விபூதி அபிஷேகம் : விபூயால் அபிஷேகம் செய்தால், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.
- அருகம்புல் சாறு அபிஷேகம் : அருகம்புல் சாறு கொண்டு சிவனை அபிஷேகித்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.
- பசும் பால் : பசும் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். நோய்நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும்.
- தயிர் அபிஷேகம் : தயிரால் ஈசனை அபிஷேகித்தால் உடல் பலம், ஆரோக்கியம் பெறுவீர்கள்.
- நெய் அபிஷேகம் : பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வரியம் சேரும்.
- கரும்பு சாறு அபிஷேகம் : கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் தன விருத்தி ஏற்படும்.
- தேன் அபிஷேகம் : தேன் கொண்டு அபிஷேகித்தால் தேகம் பொலிவு பெறும்.
- சர்க்கரை அபிஷேகம் : மிருதுவான சர்க்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் துக்கம் விலகும்.
- பூக்கள் அபிஷேகம் : புஷ்பங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் பூலோக பாவம் அகலும்.
- இளநீர் அபிஷேகம் : இளநீரால் ஈசனை அபிஷேகித்தால், சகல சம்பத்துகளும் வாய்க்கப்பெறுவீர்கள். இன்பமான வாழ்வு கிடைக்கும்.
- ருத்திராட்சம் அபிஷேகம் : ருத்திராட்சம் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆனந்த வாழ்வு அமையும்.
- சந்தன அபிஷேகம் : அரைத்து எடுத்த சந்தனத்தால் அபிஷேகித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
- தண்ணீர் அபிஷேகம் : சுத்தமான நீரினால் ஈசனை அபிஷேகம் செய்தால் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
- வில்வ அபிஷேகம் : வில்வத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் வந்து சேரும்.
- அன்ன அபிஷேகம் : அன்னத்தால் அபிஷேகித்தால் அதிகாரம், தீர்க்காயுள், மோட்சம் கிடைக்கும்.
- திராட்சை சாறு அபிஷேகம் : திராட்சைச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
- பேரீச்சம்பழ அபிஷேகம் : பேரீச்சம்பழம் கொண்டு அபிஷேகம் செய்தால் எதிரிகள் விலகுவார்கள்.
- மாம்பழ அபிஷேகம் : மாம்பழத்தால் அபிஷேகித்தால் தீராத வியாதிகள் நீங்கும்.
- தயிர் அபிஷேகம் : தயிரால் அபிஷேகம் செய்தால், நல்ல குழந்தைகளைப் பெறலாம்.
- நெய் அபிஷேகம் : நெய்யால் அபிஷேகம் செய்தால் முக்தியைத் தரும்.
- மஞ்சள் தண்ணீர் அபிஷேகம் : மஞ்சள் கலந்த நீரினால் அபிஷேகம் செய்தால் மங்கலம் உண்டாகும்.
சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளை காண்பவர்களுக்கு சிவ அருள் கிடைக்கும் என்று சித்தர்கள் பல்வேறு பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனவே நாளை மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு உகந்த பொருட்களால் அபிஷேகம் செய்து பலன் பெறுங்கள்.