புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிற.இந்த நிலையில் கியூட் (CUET PG தேர்வு முடிவு வெளியீடு ) நுழைவுத்தேர்வு முடிவு வெளியானது. 1.8 லட்சம் மாணவர்கள், 1.7 லட்சம் மாணவிகள் என சுமார் 3.5 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில், 55% பேர் இந்த தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், தேர்வு முடிவு cuet.nta.nic.in, nta.ac.in ஆகிய இணையதளங்களில் சற்றுமுன் வெளியாகியுள்ளது.