இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஸ்பெஷல் உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது ரயில்வே அமைச்சகம்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்பு உணவுகளை செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை food on track என்ற ஆப் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.