Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு நாட்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தங்களிடம் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மையம் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் மட்டும் போதும்.இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் இறுதி ஆண்டு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாம் மூலமாக sbi லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தங்கள் நிறுவனத்திற்கு தகுதியான நபர்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்ய உள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சுமார் 18000 முதல் மாத சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலை பெறுவதற்கு 9994464607 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |