இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா, ஐயர்,ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி போன்ற நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினிமா பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர்கள் பேசி உள்ளனர். இதில் நடிகர் ஜெய் பேசிய போது இந்த படத்தோட முதல் பாதி சொல்லி முடித்ததும் நான் சுந்தர் சி சாரிடம் கேட்ட முதல் கேள்வி இதை எப்படி யோசித்தீர்கள். ஏனென்றால் இது மிகவும் சிக்கலான கதை அதை அழகாக புரிகின்ற மாதிரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் கதை இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது என தனது பல அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.