Categories
தேசிய செய்திகள்

18 மாதங்களாக பாதுகாக்கப்பட்ட இறந்தவரின் உடல்…. பின்னணி என்ன?…. தீவிர விசாரணை….!!!!

கொரோனா காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன் இறந்த 35 வயது நபரின் உடலுடன் அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வந்ததன் பின்னணி என்ன என்பது தொடர்பாக கான்பூர் காவல்துறையின் சிறப்பு விசாரணையை துவங்கியிருக்கிறது. அந்த விசாரணைக் குழுவை அமைத்து காவல்துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்விசாரணை குழுவினர் 2 முக்கியமான விஷயங்களை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இத்தனை மாதங்களாக உடல் அழுகாமல் இருக்க அந்தக் குடும்பத்தினர் எந்த முறையைக் கையாண்டனர். அத்துடன் என்ன காரணத்திற்காக இவர்கள் இந்த உடலை பாதுகாத்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி இன்னும் எத்தனை காலத்துக்கு இவ்வாறு பாதுகாக்க திட்டமிட்டு இருந்தனர் என்பது குறித்தும் விசாரிப்பார்கள் என கூறப்படுகிறது.

இதுபற்றி இறந்தவரின் அலுவலகம், வங்கிக்கணக்கு மற்றும் பிற விஷயங்களையும் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை இதுகுறித்து குற்றவியல் விசாரணை மேற்கொள்ள விசாரணைக்குழு பரிந்துரைத்தால் அடுத்து அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவற்றில் யார் மீதேனும் தவறு இருப்பின், கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஒரு உடலை அவமரியாதை செய்வதும் குற்றம் தான் என கூறினார்.

Categories

Tech |