Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய பலாத்காரம்…. 26 பேரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….. பரபரப்பு தீர்ப்பு….!!!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்து 2020 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நான்கு பேர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதில் ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்து விட்டார். மீதம் இருந்த 21 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி அண்மையில் தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் இன்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த உறவினர்கள் எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் காவல் உதவி ஆய்வாளர்,உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி பொறியாளர் மற்றும் பாஜக பிரமுகர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Categories

Tech |