செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவது போல திரு அண்ணன் ராசா அவர்கள், மறுபடியும் தான் சொன்ன வாதம் சரிதான் என்று ஒரு ஒரு மேடை பேச்சிலும் பேசிக் கொண்டிருக்கிறார். நான் சொன்னது தவறு ஏதும் கிடையாது, இந்த புத்தகத்தை பாருங்க, அந்த புத்தகத்தை பாருங்க, இவர் சொல்லி இருக்காங்க, அவரு சொல்லியிருக்காங்க, என்னை வழிநடத்திய என்னுடைய குரு சொல்லி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்கிறார்.
அவருடைய பேச்சு சர்ச்சை பேச்சு மட்டுமல்ல, இந்து சமுதாயத்தில் இருக்கக்கூடிய பெண்களை, குறிப்பாக பெண்களுடைய மனதை, நம்முடைய சகோதரிகள் மனதை புண்படுத்தும் விதமாக தொடர்ந்து இருக்கிறது. நம்முடைய சனாதான தர்மம் நமக்குத் தெரியும், அதற்கு அழிவில்லாத ஒரு தர்மம். காலங்கள் எல்லாம் கடந்து, அழிவை சந்திக்காத ஒரு தர்மம் சனாதான தர்மம்.
எங்கே இருந்து புதிய புதிய கருத்துக்களை எல்லாம் இங்கே கொண்டுவந்து, அதன் மூலமாக சர்ச்சையிலே பேசி, சர்ச்சையில் சிக்கி, தொடர்ந்து தனி தமிழ்நாடு, அதைத் தாண்டி ஒரு ஒரு விஷயமும் கூட, ஒரு ஒரு மாதமும் கூட திமுகவினருடைய மூத்த அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், இப்பொழுது அண்ணன் ராசா அவர்கள் தொடர்ந்து ஏன் சர்ச்சை பேச்சு பேச வேண்டும்? என்றால் அவர்களுக்கு தெரிந்து விட்டது.
தமிழக மக்களினுடைய கோபம் எல்லையை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியியை பார்த்து. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை, ஒரு பக்கம் லஞ்ச, லாவண்யம் என்பது பெருத்து கிடைக்கிறது. இதன் மூலமாக சாமானிய பொது மக்களுக்கு நல்லது எங்கேயும் நடக்கவில்லை என்பது திமுக அரசுக்கே தெரியும் என தெரிவித்தார்.