அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தேனி வீரபாண்டியில் முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்வதை உயர்நீதிமன்ற கிளை ஏற்காது. அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் அதிகாரமற்ற மனைகளை பத்திரபதிவு செய்திருந்தால் அதனை புள்ளி விவரங்களுடன் அறிக்கையாக பத்திர பதிவு தலைவர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.