உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோசராய் என்ற கிராமத்தில் இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிற்கு செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் அந்த செல்போனில் அடிக்கடி இருவரும் பேசி வந்துள்ளனர்.இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்த இளைஞர் உங்களை கணவர் அழைப்பதாக கூறி யாரும் இல்லாத இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.அதனை நம்பி அந்தப் பெண்ணும் சென்ற நிலையில் அப்பகுதியில் ஏற்கனவே நான்கு பேர் இருந்துள்ளனர்.
அதன் பிறகு அந்த கும்பல் இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.ஒரு கட்டத்தில் அந்த பெண் மயங்கி விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.அதன் பிறகு பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது கணவரிடம் இது குறித்து தெரிவித்த நிலையில் உடனே அதிர்ச்சி அடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டிலிருந்த இளம் பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்து மயக்கி இளைஞர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.