ஐக்கிய அரபு அமீரக சட்டம் பொதுவாகவே மிக கடினமானதாக இருக்கும் என்பதை பலரும் அறிந்திருப்போம். அங்கு இருக்கும் சட்டங்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சற்று வித்தியாசமானதாக தான் இருக்கும்.இந்நிலையில் பொதுவெளியில் தவறவிட்ட பொருட்கள் தொடர்பாக கடுமையான சட்டத்தை அந்நாட்டு அரசு தற்போது கொண்டு வந்துள்ளது.
அதாவது பொது இடங்களில் தவறுதலாக விடப்பட்ட பொருட்களை கண்டெடுத்தால் அதனை 48 மணி நேரத்திற்குள் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.அப்படி செய்யாமல் அத்தனை பொருட்களை வைத்திருந்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நேரிடும். வேறொருவருக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்போருக்கு 20000 அபராதம்,அதாவது 4 லட்சம் இந்திய ரூபாய்க்கு மேல் அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என நாட்டு அரசு தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.