Categories
தேசிய செய்திகள்

விமான பயணத்தின் போது விமானிகள் உறங்குகிறார்களா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று 542 உள்நாட்டு விமானிகளிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 2 மணி நேரம் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் வைத்துவிட்டு விமானிகள் தூங்குவது தெரியவந்துள்ளது. நாட்டில் 66% விமானிகள் விமானத்தை இயக்கும் போது உறங்குவதாகவும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேர வேலை செய்வதை இதற்கு காரணம் என்றும் ஆய்வில் கருத்து தெரிவித்த விமானிகளின் தரப்பில் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து 54% விமானிகள் கடுமையான தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 41% விமானங்கள் மிதமான தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது காலை 6 மணிக்கு விமானம் புறப்பட திட்டமிடும்போது அதிகாலை 3 மணி முதல் 3:30 மணிக்குள் எழுந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக பெரும்பாலான விமானங்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விமான விபத்து சம்பவங்களில் மிக முக்கிய காரணமாக விமானிகள் தூக்கம் மற்றும் சோர்வு ஆகியவை கூறப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு 158 உயிர்களை பழிவாங்கிய மங்களூர் விமான விபத்திற்கான முக்கிய காரணமாகும் அதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 66% விமானிகள் விமானத்தை இயக்கும்போது உறங்கி விடுவதாக வெளியாயிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |