இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்து கொண்டே செல்கிறது. முன்னணி மின்னணு வர்த்தகன் நிறுவனமாக அமேசான் உள்ளது. அமேசான் தனது விரைவு சேவை மூலம் 4 மணி நேரத்திற்குள் பொருட்களை டெலிவரி செய்கிறது. அமேசான் பிரைம் சேவை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த விரைவு டெலிவரி தேவை கிடைக்கிறது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அமேசான் தனது விரைவு டெலிவரி சேவையை விரிவு படுத்தியது.
இந்நிலையில் சூரத், மைசூர். மங்களூர் போபால், நாசிக், அனந்தபூர், வாராங்கல், பரிதாபத், பாட்னா உள்ளிட்ட நகரங்களுக்கு அமேசான் விரைவு டெலிவரி சேவை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி மேற்கூரிய நகரங்களில் அமேசான் பிரைம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ், புத்தகம், பொம்மைகள், வயர்லெஸ், மீடியா, கிட்சன் பொருட்களை ஒரே நாளில் டெலிவரி பெற்றுக் கொள்ளலாம். இதனையடுத்து மற்ற போட்டி நிறுவனங்கள் விரைவு டெலிவரி சேவையில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் அமேசான் விரைவு நிறுவனம் தனது பிரைம் பயனர்களுக்கு கூடுதல் நகரங்களில் விரைவு டெலிவரி சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.