Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி ? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை …!!

தமிழகத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி  டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை காலமாக பார்க்கப்படுகிறது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தற்பொழுது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தை பொறுத்தவரை அமைச்சர்கள் ஏவா.வேலு, கே.என் நேரு, செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும், அதே போல துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்று இருக்கிறார்கள்.

குறிப்பாக வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரக்கூடிய மழை நீர் வடிகால்  அமைக்கும் பணிகள்,  அதே போல சாலைகளை மறுசீரமைக்கும் பணிகளை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று இன்று நடைபெறக்கூடிய ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை காலங்களில் நகராட்சி நிர்வாகத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரத்துறை என அனைத்து துறைகளுமே ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். எனவே அந்த துறைகள் அனைத்துமே தற்போது எடுத்துள்ள பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக  சாலைகளை மறு சீரமைப்பு படுத்தல், மின்கம்பங்களை மாற்றுதல், ஏரி மற்றும் ஆற்றங்கரை இருக்கக்கூடிய கரைகளை பலபடுத்துதல் அதேபோல பேரிடர் மேலாண்மை துறை சார்பாக கடந்தாண்டு எந்தெந்த இடங்களில் மழை நீர் அதிகமாக தேங்கியது.

மழைக்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து அங்கிருக்க கூடிய மக்களை அதற்கு முன்பாக வேறு இடத்திற்கு மாற்றுவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவார்கள். தற்போது பேரிடர் காலம் துவங்குவதற்கு முன்பாக  இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் எந்தெந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்

Categories

Tech |