Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் உதவித்தொகை… விண்ணப்பிக்கும் முறை எப்படி..? இதோ முழு விவரம்…!!!!!

2008 – 2009 ஆம் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு நாடு முழுவதும் சிறுபான்மையின மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதிலும் முழுவதுமாக மத்திய அரசின் நிதியின் மூலம் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர்,  பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக இந்த உதவி தொகையானது செலுத்தப்படுகிறது. இதற்கு தேர்வு செய்யப்படுவதற்கு மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.

மேலும் மாணவரின் பெற்றோர்கள் வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த நிலையில் மாணவர்கள் இந்த உதவி தொகையை பெறுவதற்கு முதலில் www. scholarship.gov.in எனும் இணையதளத்தில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றி பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், சிறுபான்மையினர் என்பதற்காக வகுப்பு சான்றிதழ், ஆதார் எண், வங்கி கணக்கு எண், மற்றும் ifsc கோடு போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் இந்த உதவி தொகையினை பெறுவதற்கு வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |