Categories
அரசியல் மாநில செய்திகள்

சனாதனம்: நீங்கள் நீக்கவில்லையெனில் நாங்கள் எரிச்சிடுவோம்!…. முத்தரசன் ஆவேசம்….!!!!

கோவை சிரியன் சர்ச் சாலையிலுள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, எம்பி ஆ.ராசா சனாதனம் பற்றி பேசியதை இந்துமதத்தை குறித்து பேசியதாக கலவரத்தை உண்டாக்க நினைக்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதன குறித்து இருக்கிறது. அதாவது மேல்ஜாதி, கீழ்சாதி என படத்தோடு இருக்கிறது.

இதற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இதனிடையில் இதனை நீக்கவில்லை எனில் இந்த பாடத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்கவேண்டிய சூல்நிலை வரும் என அண்ணாமலையை பார்த்து பகிரங்கமாக கேட்கிறேன். அதுமட்டுமின்றி தமிழகத்தில் சட்டஒழுங்கை சீர்குலைத்து தற்போதுள்ள தி.மு.க ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க செயல்பட்டு வருகிறது.

அத்துடன் கோவை உள்ளிட்ட பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்த அனைத்து இடத்திலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உண்மையை கண்டறிந்து ,எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்றாலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் கால தாமதமின்றி தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |