தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபியும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இது தொடர்பாக பேசுவதற்காக டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்த சூழலில் மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அனுப்பானடியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மாபாளையத்தைச் அக்குபஞ்சர் கிளினிக் நடத்திவரும் அபுதாகிர் என்பவரையும், சம்பட்டிபுரத்தை சேர்ந்த உசேன், நெல்லைப்பேட்டையைச் சேர்ந்த சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.