இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அரசு அவ்வப்போது எதிர்பாராத அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதாவது சில சமயத்தில் அது போனஸ், அகவிலைப்படி உயர்வு போன்ற இன்ப செய்தியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலங்களில் போனசும் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பல அதிர்ச்சி தகவல்களையும் அரசு வெளியிடும். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் தான் அரசு வெளியிட்டு உள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால் தீபாவளி போனசை எதிர்நோக்கி அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பணிபுரியும் அனைத்திந்திய சேவை அதிகாரிகளுக்கு அரசு செய்தியை வெளியிட்டு உள்ளது. இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள கடிதத்தில், வடகிழக்கு மாநிலங்களில் பணிபுரியும் அனைத்திந்திய சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, அசாம், சிக்கி, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த அனைத்திந்திய சேவை அதிகாரிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் 25 சிறப்பு படியாக வழங்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் தற்போது அந்த சிறப்பு படி ரத்து செய்யப்பட்டுள்ளது.