செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவினருக்கு மதம் தவிர வேறு ஏதாவது கோட்பாடு உண்டா ? மதம் என்பதை அரசியலாக முடியுமா ? மதம் என்பது ஒரு உணர்வு, மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு. கடவுள், ஜாதி, மதம் எல்லாம். ஆனால் அரசியல் என்பது, உலகத்தில் எல்லா உயிர்களுக்குமானது. ஆடு, மாடு, கோழி, நாய், நரி, புல்லு, பூண்டு, மாறன், செடி, கொடி எல்லாத்துக்குமானது.
அந்த அரசியலில் போய், எதற்கு மதத்தை கலக்குறீர்கள் ? மதத்திற்கும், அதிகாரத்திற்கும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு இருக்க வேண்டும். நீங்கள் மதத்தையே அரசாக ஆக்கினால் எப்படி? புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சொன்னதை… இன்னொரு முறை பதிவு செய்கிறேன், தான் வாழுகின்ற நாட்டை விட, சார்ந்து இருக்கின்ற மதம் தான் பெரிது என்று கருத தொடங்கி,
இவர்கள் ஆட்சி ஆளுவார்களேயானால் இந்த நாடு சுக்கு சுக்காக சிதறி அழிவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார். இதை நான் சொல்லவில்லை. புரட்சியாளர் அம்பேத்கார் சொல்லுறாரு. நடக்கும் என்று அவருக்கு தெரியும், அதனால் தான் சொல்கிறார். சிலைகளை சேத படுத்துவது தவறு, எனக்கு எல்லாம் வலிக்கும். தென் மாவட்டங்களுக்கு செல்கின்ற போது, நாட்டின் விடுதலைக்கு போராடிய காமராஜர், தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவர் எல்லாம் அன்றைக்கு சிறையில் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இறந்தும் சிலையாக நிற்கும் போதும் சிறையில் இருக்கிறார்கள், அதை பார்த்தால் அப்படியே வலிக்கும், விடுதலை பெற்ற நாடுதான.. ஏனென்றால் யாராவது சிலையை உடைத்து விடுவார்களோ என்று, இப்பவும் பெரிய சிறைக்கம்பி மாதிரி போட்டு, பூட்டி வைத்திருக்கிறார்கள். அது ஒரு துயரமானது தான். அதை நான் ஏற்கவில்லை, அருவருக்கிறேன், அப்படியெல்லாம் செய்யக்கூடாது என தெரிவித்தார்.