இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு இணையதளங்களின் பயன்பாடு கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. சமூக வலைதளங்களை பின்பற்றாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் ஸ்டாராக வேண்டும் என்றால் திரைப்படங்களிலும், டிவி சீரியல்களும் நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டாலே போதும் அதிக பாலோயர்களை பெற்று ஸ்டார் ஆகலாம். அதன் மூலம் வருமானமும் பெறலாம்.
இந்நிலையில் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம், தனது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் வழங்கியுள்ளது. அதன்படி, ஸ்டோரிஸில்(Stories) இனி ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்கலாம். முன்பு, இது 15 நிமிடம் மட்டுமே வைக்கும்படி இருந்தது. பயனாளர்கள் தொடர்ந்து ஸ்டோரிஸில் அப்டேட் வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில், இதற்கான சோதனை முன்னோட்டம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில் கிடைத்த முடிவின் அடிப்படையில், தற்போது இந்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.