Categories
மாநில செய்திகள்

ஒருவாரம் பள்ளிகள் விடுமுறை.. இன்று மீண்டும் திறப்பு…. ஆன்லைன் வகுப்பு….????

புதுச்சேரி மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஒருவாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் 30 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காய்ச்சல் இன்னும் குறையவில்லை என்பதால், பள்ளிகளை திறக்காமல், ஆன்லைனில் வகுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல். தமிழகத்திலும் காய்ச்சல் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |