Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…26)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…26) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

உஞ்சனை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலங்காட்டு புதூர், சக்திநாயக்கன் பாளையம், போக்கம்பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், கோலாரம் ஆகிய பகுதிகள்.

போடி பகுதியல் திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், போடி, போ. அணைக்கரைப்பட்டி, போ. மீனாட்சிபுரம், குரங்கனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது

திருப்பாலை பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பாலை துணை மின் நிலையப்பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிப் பாதை பராமரிப்புப் பணிகள் திங்கள் கிழமை (செப். 26) நடைபெறவுள்ளன. காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை திருப்பாலை அய்யனார்புரம், தவசிபுதூர், ராமலிங்கா நகர், வீரபாண்டி, அன்னை வேலு நகர் ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

இன்று காலை 09. 00 மணி முதல் மதியம் 2. 00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக திருவேற்காடு மற்றும் அதனை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2. 00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவேற்காடு பகுதி ஐஸ்வர்யா கார்டன், ஜெயலட்சுமி நகர், ஏ. சி. எஸ் மருத்துவ கல்லூரி, கோ-ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகரம்சீகூர் அடுத்துள்ள மங்களமேடு துணைமின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பராமரிப்பு பணி முடியும் வரை இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ரஞ்சன்குடி, பெருமத்தூர் , மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர் , அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர் , திருவளாந்துரை ,பிம்பலூர், மறவநத்தம் ,தைகால், நன்னை, அந்தூர், லப்பைகுடிகாடு , திருமாந்துறை , அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை , கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர் , நன்னை, ஓலைபாடி . எழுமூர் , வாலிகண்டபுரம் , மேட்டுபாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி இயக்குனர் சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |