Categories
சினிமா தமிழ் சினிமா

“பார்த்த ஞாபகம் இல்லையோ” 58 வருடங்களுக்குப் பிறகு சிவாஜியின் பாடல் ரீமிக்ஸ்…. கொலை படத்தின் மாஸ் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி நான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு நடிகர் விஜய் ஆண்டனி கமிட் ஆனார். இவர் தற்போது பிச்சைக்காரன் 2, வள்ளி மயில் மற்றும் கொலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் கொலை திரைப்படத்தை பாலாஜி குமார் இயக்க, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், புதிய அப்டேட்டை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த 1964-ம் ஆண்டு சிவாஜி கணேசன், சரோஜாதேவி மற்றும் எம்ஆர் ராதா உள்ளிட்டோர் நடித்த புதிய பறவை என்ற திரைப்படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை தற்போது 58 வருடங்களுக்கு பிறகு ரீமிக்ஸ் செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சிவாஜியின் ரீமிக்ஸ் பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.

Categories

Tech |