சைபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி 2- வது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சைபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக போர்லா உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவரது நிறுவனத்தின் கொரோனா சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட பேக்ஸ்லோவிட் என்ற தடுப்பு மருந்தினை அவர் எடுத்துக் கொண்டார். அதனால் அவர் குணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ஆபத்தில் உள்ள நபர்களுக்கு போஸ்கோவிட் தடுப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். சைபர் மற்றும் அதன் ஜெர்மன் நாட்டு பங்குதாரரான பையோஎன்டெக் என்ற நிறுவனத்தில் உற்பத்தியான கொரோனா தடுப்பு மருந்தின் 4 டோஸ்கள் போர்லாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஓமைக்ரானின் பிஏ. 5 மற்றும் பிஏ 4 ஆகிய இரு வகைகளையும் முறையே 84.8 சதவீதம் மற்றும் 1.8 சதவீதம் என்ற அளவில் எதிர்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. இந்த வகை கொரோனா அமெரிக்கா முழுவதும் பரவி வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.