ராஜஸ்தான் ஜோத்பூர் இரயில் நிலையம் அருகில் அண்மையில் புதியதாக சாலை போடப்பட்டது. இச்சாலை வழியே பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை லாரியைப் பின் தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனம் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனால் வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்திருக்கிறார். அவரை அக்கம் பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர்.
அதன்பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடைத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர். அந்த சாலை வழியே வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுபாதையில் திருப்பி விடப்பட்டது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை மீட்கும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.