உக்ரைன் நாட்டில் தானியங்களை எடுத்துக்கொண்டு, மேலும் ஏழு சரக்கு கப்பல்கள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் தொடங்கிய போருக்கு பின், அந்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுத்தது. எனவே உணவு தானிய பற்றாக்குறை உண்டாகி, மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டார்கள். எனவே, ரஷ்யா, துருக்கி, உக்ரைன் மற்றும் ஐ.நா சபை சேர்ந்து இந்த பிரச்சனையை தீர்க்க புதிய ஒப்பந்தத்தை செய்தனர்.
அதன்படி மற்ற நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து செல்லும் தானியங்கள் சரக்கு கப்பல்களின் வழியே ஏற்றுமதியாகிறது. கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி அன்று இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. அன்று முதல் உக்ரைன் நாட்டிலிருந்து தானியங்கள் சுமார் 220 கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
⚡️ Infrastructure Ministry: 7 more cargo ships leave Odesa Oblast.
The seven vessels are carrying over 146,000 tons of grain. Almost 220 ships carrying 4.8 million tons of Ukrainian grain have left Ukrainian ports since Kyiv and Moscow signed the UN-backed grain deal on July 22.
— The Kyiv Independent (@KyivIndependent) September 25, 2022
அந்த கப்பல்களில் சுமார் 4.8 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதியாகியிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் ஒடேசா மாகாணத்திலிருந்து தானியங்களுடன் இன்று ஏழு சரக்கு கப்பல்கள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேலும் ஒரு லட்சத்து 46 ஆயிரம் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.