பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் தொடக்கத்திலிருந்தே அரண்மனையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவில் பிடிவாதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து வெளியேறி தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மேகனின் பிடிவாத குணம் தான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரண்மனை, மேகனுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தாலும் அதனை அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தான் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கை மூலம், அரண்மனை தனக்கு தந்த ஆதரவை அவர் பொய்யாகியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் அரச குடும்பத்தில் காலடி வைத்த நாளிலிருந்து அரண்மனை தன்னை வெறுக்க வேண்டும் என்ற திட்டத்துடனே செயல்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.