தாய் திட்டிய காரணத்தினால் ஒன்பதாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் இவரது மகள் தீபிகா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பரீட்சை எழுதுவதற்காக பக்கத்து வீட்டில் உள்ள மாணவனிடம் பரீட்சைப் பேடு வாங்கிச் சென்றுள்ளார். இதனை அறிந்த தாயார் எதற்காக அடுத்தவர்களிடம் பேடு வாங்கி எழுதுகிறாய் என கேட்டு மாணவியை கண்டித்துள்ளார். இதனால் வேதனை அடைந்த மாணவி கடந்த 15 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகளைக் காணாமல் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன மாணவியை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவியை விரைந்து தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஒரு விவசாய கிணற்றில் மாணவி பிணமாக மிதந்தார் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதே பகுதியை சேர்ந்த விவசாய மக்கள் குழந்தைவேல் குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு கொண்டுவந்தனர். மாணவியின் உடலைபார்த்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.. பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தாய் திட்டியதால் மனவேதனை அடைந்து வீட்டை விட்டு வெளியேறி கிணற்றில் குறித்து மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.