தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை காலத்தினுடைய இறுதி கட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையினுடைய நிலையானது கடந்த ஒரு வார காலமாக வறண்ட வானிலை என்ற அளவிலே நீடித்து வந்தது. இந்த நிலையில் நாளைய தினத்திலிருந்து மேற்கு திசை காற்றினுடைய வேக மாறுபாடு காரணமாக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இன்றைய தினம் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவரக்கூடிய வாய்ப்பிருந்தாலும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளைய தினம் வட மாவட்டங்களில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி அதே போல் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள் மாவட்டங்களில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்க்குப் பிறகு வரக்கூடிய நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு பெரிய அளவு இல்லை என்றாலும், மழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த நான்கு நாட்களாக குறிப்பாக தமிழகமெங்கும் வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியல் அதிகரித்து இருந்தது. மழை இல்லாத காரணத்தால் வெப்பமானது அதிக அளவு உணரப்பட்டது. 37 டிகிரி செல்சியஸ் என்பது இந்த காலகட்டத்துக்கான இயல்பான வெப்பநிலை என்பதால் இந்த நிலை இருந்தது என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
அடுத்துவரக்கூடிய 48 மணி நேரத்துக்கும் இதே போன்ற வெப்பநிலை இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், நாளை தினம் மழை பெய்யக்கூடிய பகுதியில் மட்டும் வெப்பநிலையானது குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.