Categories
தேசிய செய்திகள்

ஐயோ என்னை விடுங்க…. சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய டாக்டர் தம்பதி…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!

சிறுமிக்கு  சூடு வைத்து  இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் முகமது கம்புரான்-ரகுமான் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இந்நிலையில் இவர்கள் பந்தீர் காவு என்ற இடத்தில் கிளீனிக் ஒன்றை  வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் வீட்டு வேலை செய்வதற்காக 12 வயது  சிறுமியை ஒருவரை  மூன்று மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் இவர்கள் அந்த சிறுமியை அடித்து, உதைத்து வேலை வாங்கி வருகின்றனர். அதேபோல் நேற்றும் சிறுமி சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி சிறுமியை சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் வழியில் துடித்த அந்த சிறுமி கத்தியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தைகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் சிறுமியை கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கம்புரான், ரகுமான் ஆகிய 2  பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |