தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் நாளை நடைபெற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
கோவை பிஜேபி மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக நாளை சிவனாந்தா காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இந்த அனுமதி தற்போது மறுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பிஜேபி நிர்வாகிகள் கூறும்போது, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசப்பட்டதாய் கண்டிக்கும் வகையில் அனைத்து பிஜேபி நிர்வாகிகளும், சிவனாந்தா காலனி பகுதியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்கள் .
இந்நிலையில் காவல்துறை தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று இரண்டு முப்பது மணி அளவில் பாரதி ஜனதாகட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையம் வருகிறார். இதனை எடுத்து அவர் பொள்ளாச்சி சென்று பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம் நடந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சூழலை கேட்டறிகின்றார் என சொல்லப்படுகின்றது.