Categories
உலக செய்திகள்

பியோனா புயலில் சிக்கி சேதமடைந்த வீடுகள்…. மின்சாரமின்றி கனடா மக்கள் தவிப்பு…!!!

பியோனா (Fiona) என பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த புயலானது, கனடாவின் கிழக்கு பகுதியை பயங்கரமான சூறாவளி-காற்றுடன் தாக்கியது.

கனடா நாட்டில் கிழக்கு பகுதியில் பயங்கரமான சூறாவளி காற்றுடன் பியோனா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் குறிப்பாக நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடித்து சேதமடைந்துள்ளன. பலர் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பெண் ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளை வெல்ல அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் ஏராளமான மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் கிடக்கின்றன. நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடரில் உள்ள ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை, சேனல்-போர்ட் ஆக்ஸ் பாஸ்குஸ் பகுதியில் பல வீடுகள் சூறாவளியால் இடிந்து விழுந்தன என்று கூறியுள்ளது. மேலும் நியூஃபவுண்ட்லாந்தின் தென்மேற்கு கடற்கரையில் அதிக காற்று, அதிக அலைகள், வெள்ளம் மற்றும் மின் தீ போன்ற தீவிர வானிலைகள் பிளவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மின் தீ மற்றும் குடியிருப்பு வெள்ளம் போன்றவற்றை அதிகாரிகள் கையாள்வதால், 4,000 பேர் வசிக்கும் நகரம் அவசர நிலையில் இருப்பதாக ராயல் கனடிய காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |