Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மதக்கலவரம் ஏற்படுத்த திட்டம் ? – சீமான் பகீர் தகவல் …!!

மதவாத சக்திகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அமைதியை கெடுக்கும் நடவடிக்கைகளில்  தமிழக முதலமைச்சரின் சிறப்பு கவனம் செலுத்தி ஒடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்தில் மத கலவரங்களை ஏற்படுத்த திட்டமிடும் சக்திகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.

சற்று நேரத்திற்கு முன்பாக தான் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். கலவரத்தை தூண்டுவோரை விரைந்து கைது செய்க என்று அவர் வலியுறுத்தி இருந்தார். தற்பொழுது நாம் தமிழர் கட்சியும் அறிக்கை மூலமாக வலியுறுத்தி இருக்கிறது .  ஆர்எஸ்எஸ் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வரும் செய்திகள் கடந்த காலத்தை நினைவூட்டுகின்றன என்று சீமான் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் மத கலவரம் ஏற்படுத்த திட்டமிட முயற்சிகள் நடைபெறுவதாக சீமான் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். மதவாத சக்திகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |