Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. இதற்கு அனுமதி இல்லை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி மற்றும் மத வேறுபாடு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி மாணவர்கள் ஜாதி அடிப்படையில் கையில் கயிறு கட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதரிடையே தற்போது ஆர் எஸ் எஸ் அணி வகுப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக பள்ளிகளில் ஆர் எஸ் எஸ் வகுப்பு களுக்கு அனுமதி கிடையாது, ஆனால் பொது இடங்களில் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதற்கு எதிராக நாம் செயல்படக்கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்து உள்ளத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் பேசியுள்ளார்.

Categories

Tech |