14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர், பெற்றோர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் நெகரம் உக்கிபாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ்கும், 14 வயது சிறுமி ஒருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் பாப்பினி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து அறிந்த ஊரக நல அலுவலர் அம்மாசை காங்கேயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த கோவிந்தராஜ், கோவிந்தராஜின் தந்தை நாராயணன், மற்றும் அவர் அவர்களை அவருடன் திருமணத்தை உடனிருந்து நடத்தி வைத்தான் கோவிந்தராஜின் தந்தை நாராயணன், தாய் நாகம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை இளங்கோவன் தாயார் சுனிதா ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.