கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை செய்து கொண்டிருக்கிறது. ஓணம் பண்டிகை முன்னிட்டு 25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குழுக்கல் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இதில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு முதல் பரிசான 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரனான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்த நிலையில் பரிசு விழுந்த மறுநாள் அனுப்புக்கு வரி பிடித்தம் போக சுமார் 15 கோடியே 75 லட்சம் பணம் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அவர் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார் பணம் கிடைத்த பின்னர் அதை வைத்து வீடு கட்டுவேன் ஏழைகளுக்கு உதவுவேன் என தெரிவித்துள்ளார்.
அதன் பின்பு தான் அவரது கஷ்டம் தொடங்கியது அதாவது தினமும் அனுப்பிடும் உதவி கேட்டு ஏராளமானோர் அவரது வீட்டிற்கு வர தொடங்கியுள்ளனர். அது மட்டும் அல்லாமல் அனுப்பின் உறவினர்களும் வீட்டிற்கு வந்து எங்களுக்கும் கொஞ்சம் பணம்தான் என கேட்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் பணம் கேட்டு மிரட்டல் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் பரிசு விழுந்த ஒரு சில நாட்களிலேயே தனது நிலை ஒரு படியாக மாறிப்போனதை கண்டு அனுப் திகைத்துப் போனார் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்துள்ளார் இதற்காக தனது வீட்டை போட்டுவிட்டு சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ்ந்து வருகின்றார். லாட்டரி அடித்து ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியவர்கள் பற்றி நாம் பலரும் தெரிந்திருப்போம். ஆனால் இவர் லாட்டரி சீட்டு வாங்கியே ஓய்ந்திருக்கின்றார்.
அதாவது கேரள மாநிலம் காட்டூரை சேர்ந்த ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 52 வருடங்களாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றார். லாட்டரி மூலம் தனது வாழ்க்கை என்றாவது மாறும் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கிறார். இவர் இதுவரை லாட்டரி சீட்டுக்கு செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா அந்த மொத்தம் 3.5 கோடியை தாண்டி இருக்கிறது. இவ்வளவு செலவு செய்தது கூட அவருக்கு தெரியாது அவர் வைத்திருந்த பழைய லாட்டரி சீட்டுகளை மொத்தமாக தட்டி என்ன ஆரம்பித்த போது தான் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் லாட்டரி சீட்டுக்காக தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வந்திருக்கின்றார். இப்படி அவர் லாட்டரி வாங்கி இருந்தாலும் அவர் வென்ற அதிகப்பட்ச லாட்டரி பணம் எவ்வளவு தெரியுமா வெறும் ஐந்தாயிரம் மட்டுமே. இருந்தாலும் அவர் தன் லாட்டரி வாங்கும் முயற்சியை நிறுத்தவில்லை. மேலும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் ராகவன் 18 வயதில் லாட்டரி சீட்டுகளை வாங்கி தொடங்கியுள்ளார். ஒரு நாளைக்கு பத்து லாட்டரி சீட்டுகள் வரை வாங்குகிறார் 52 வருடங்களாக டிக்கெட் வாங்கி வந்தாலும் அவரது துரதிஷ்டம் அவரது ஆசை நிறைவேறவில்லை.