Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து”…. வாட்ஸ் அப்பில் வீடியோ பரப்பிய தமிழ் ஆசிரியர்…. பணியிடை நீக்கம்….!!!!!!

மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் குரூப்பில் பரப்பிய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் ஒன்றியம் மல்லபாடியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ்அப் குழுக்களில் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. இதை அடுத்து அப்பள்ளியில் நேரடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி மாவட்ட அலுவலருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் விசாரணை செய்ததில் அப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜ் என்பவர் தலைமையாசிரியர் மீது பொய்யான புகார் அளிக்கும் வகையில் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இதன்பின்னர் தமிழ் ஆசிரியர் அனு முத்துராஜாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |