கோடநாடு காட்சி முனைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் இருக்கும் கோடநாடு காட்சி முனை முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கொடநாடு காட்சி மழை கோத்தகிரியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்திலும் இருக்கிறது. இங்கு தொலைநோக்கி மூலமாக தாழ்வான பகுதியில் இருக்கும் மேட்டுப்பாளையம், பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். கடந்த சில நாட்களாக கோத்தகிரியில் தொடர்ந்து மழை பெய்ததால் கோடநாடு காட்சி முனையில் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர்.