Categories
சினிமா

“என்னை அன்புடன் வழிநடத்தும் என் குருசாமி”… ஜெயராமை புகழ்ந்து தள்ளிய ஜெயம் ரவி….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் நடித்து இருக்கின்றனர். பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அதனை தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயம்ரவி நடிகர் ஜெயராமுடன் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இதை புகைப்படத்துடன் தன் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெயம்ரவி “பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப் போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் என் குருசாமி ஜெயராமுடன் பம்பையில்…!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |