Categories
அரசியல் மாநில செய்திகள்

“அக்டோபர் 17 வர தான்”அதுக்குள்ள எல்லாமே மாறிடும்…. இபிஎஸ்-ன் புதிய திட்டம்….. அதிமுகவில் நிகழப்போகும் அதிரடி மாற்றம்….!!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே உட்கட்சி பூசல்கள் அதிகரித்துவிட்டது. இந்த உட்கட்சி பூசல்களால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவால் சரிவர கடமையை ஆற்ற முடிவதில்லை. கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாகவே வந்தது. இதனால் ஓபிஎஸ்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இருப்பினும் இபிஎஸ் நிரந்தர பொதுச் செயலாளராக மாற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் செப்டம்பர் 25-ஆம் தேதி எடப்பாடி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது 2024-ஆம் ஆண்டு தேர்தல், கூட்டணி அமைத்தல், திமுகவினர் போடும் வழக்குகள் மற்றும் ரெய்டு போன்றவற்றை சமாளித்தல், வழக்குகளில் இருந்து தப்பிக்க திறமை வாய்ந்த வழக்கறிஞர் குழுவை நியமித்தல் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்து அடுத்த மாதம் பொதுச் செயலாளர் தேர்தல் அட்டவணையை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

அதாவது தேர்தலின் போது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தால் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடுவாராம். இதற்கு ஏற்ப கட்சி விதிகளில்  ஏற்கனவே திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் அக்டோபர் மாத 17-ஆம் தேதிக்குள் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுத்துவிட இபிஎஸ் முடிவு செய்துள்ளாராம். ஏனெனில் அன்றைய தினம் அதிமுகவின் பொன்விழா ஆண்டு நடைபெறுகிறது. இந்த பொன்விழா வருவதற்குள் எடப்பாடி நிரந்தர பொதுச் செயலாளராக மாறிவிட வேண்டும் என திட்டமிட்டுள்ளளார்.

அதுமட்டுமில்லாமல் பொன்விழா ஆண்டின் போது எடப்பாடிக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்களை நன்றாக கவனிப்பதற்கு எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடுமையான போட்டி நிலவலாம். இதற்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு திட்டத்தை தீட்டி வைத்திருக்கிறாராம். அதாவது இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்கு டெல்லி பயணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Categories

Tech |