Categories
மாநில செய்திகள்

“கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 100% வேலை வாய்ப்பு”… அமைச்சர் ஐ பெரியசாமி உறுதி…!!!!!

கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டுறவுத் துறையில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நிகழ் வருடத்திற்கான முழு நேர கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா செம்பட்டி அருகே ஜெயினி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் தலைமை வகித்துள்ளார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுசாமி சரக துணை பதிவாளர் முத்துக்குமார் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இதில் அமைச்சர் ஐ பெரியசாமி கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி பேசியுள்ளார். அப்போது கூட்டுறவு ஒன்றியம் மூலம் நடத்தப்படும் கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு சங்கங்கள் தனியார் வங்கிகளில் பணிபுரிய கூட்டுறவு பட்டய படிப்பு முக்கியமான கல்வி தகுதியாக இருக்கிறது. இந்த பட்டய படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு 100% வேலை வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் ஆத்தூர் கூட்டுறவு கலைக்கல்லூரி முதல்வர் வெங்கடாசலம், கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கிருஷ்ணகுமார், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் செல்வகுமார், கூட்டுறவு சார்பதிவாளர்கள் அன்பரசு ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய செயலர் ராமன் ஊராட்சி தலைவர் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் செம்பட்டியில் 100% மானியத்தில் ஆதரவற்ற பெண்கள் விதவைகள் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு அமைச்சர் ஐ பெரியசாமி விலையில்லா ஆடுகளை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கியுள்ளார். ஒன்றிய குழு துணை தலைவர் ஹேமலதா மணிகண்டன் ஒன்றிய செயலாளர் ராமன் முருகேசன் போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் விழாவில் திண்டுக்கல் மாவட்ட திமுக துணை செயலாளர் தண்டபாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான் போன்ற கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |