செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், வணிக நிறுவனங்களின் பெயர் பலகை கூட தமிழில் இல்லை. காவல்துறை வண்டியில் கூட போலீஸ் அப்படின்னுதான் இருக்கே ஒழிய காவல் அப்படின்னு எழுதுறது இருக்கிறது. திமுக, திராவிட கட்சிகள் தமிழ் மொழிக்கு ஒன்னும் செய்யலை என்று பாஜக சொல்லுறது தெரிகிறது.
ஆனால் பாரதிய ஜனதா அவங்க வந்தா செஞ்சுடுவாங்களா ? கோவில்களில் எல்லாம் தமிழ்ல வழிபாடு செஞ்சிருவாங்களா ? வழக்காடு மன்றத்தில் நாங்கள் தமிழில் வழக்காட முடியுமா ? எல்லாம் ஒரு கொடுமை. ஆ. ராசா பேசியதற்கு அவர் மேல தேவையற்ற ஆதங்கம் . எழுதினவங்களை விட்டுட்டு, எடுத்து பேசுனவங்களை புடிச்சு நீங்க குற்றவாளி என்று சொன்னீங்கன்னா? எனக்கு கோபம் வரதான செய்யும். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்து இருக்காங்க.
தமிழ்நாடு அரசு எதிர்தரப்பு வழக்கறிஞர் கடுமையாக வாதங்களை வைத்திருந்தால், ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதியை தவித்திருக்கலாம். கொஞ்சம், கொஞ்சமா நடக்குது. சாகா வகுப்பு எல்லாம் நடக்குது அப்படின்னு சொல்றாங்க. ஆர்.எஸ்எஸ் தலைவர் சொல்லுறாரு பாருங்க.. நாங்க 400 கூட்டம் நடத்தி இருக்கோம். 1500 இடங்களில் போட்டுருக்கோம் என அவரே பேட்டி கொடுத்தது எல்லாமே இருக்கு. அப்போ அந்த அளவுக்கு வேலை நடந்துக்கிட்டு தானே இருக்கு. அதிமுக பாரத ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்த போது கூட இவ்வளவு இல்ல. இப்போவே ரொம்ப வெளிப்படையா தெரியுது என தெரிவித்தார்.