சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் பற்றி கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு மக்களிடம் கலந்துரையாடியதில் அதிக அளவில் பெண்கள் இளைஞர்கள் பாஜக சேர நினைக்கின்றார்கள் என்பது புரிந்தது. மேலும் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசாக இருந்தால் பணிகள் வேகமாக நடைபெறும் இதைத்தான் மோடி சொல்கின்றார். மேலும் பாஜக ஆளும் மாநிலங்கள் சிறப்பாக இருக்கிறது.
அதேபோல தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக திமுக மாநிலத்தில் ஆட்சி நடக்க தெரியாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறி வருகின்றார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் சில விஷயங்களில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு பலம் கிடைக்கும் நான் சொன்னதை எம்பிக்கள் தவறாக புரிந்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். மதுரை எய்ம்ஸ்க்கு 95 சதவீதம் நிதி கட்டமைப்பு பொருட்கள் ஒதுக்கியதாக நான் கூறினேன். ஆனால் 95 சதவீதம் பணி முடிவடைந்ததாக நான் சொல்லவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றார். வளர்ச்சிக்கு தேவையான நிதியை அளித்து வருகின்றார். திமுக குடும்ப அரசியல் ஊழல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது தமிழகத்தில் தற்போதைய நிலையில் வளர்ச்சி இல்லை பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறையிலும் வளர்ச்சி இருக்கும் என தெரிவித்துள்ளார்.