Categories
மாநில செய்திகள்

பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய நிதி ஒதுக்க முதல்வர் முன் வருவாரா…? எதிர்க்கட்சி துணைத் தலைவர் கேள்வி…!!!!!!

வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதம் அடைந்த 538 பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதல்வர் ஒதுக்குவாரா என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி பேசிய அவர் வடகிழக்கு பெருமழை பற்றி நாளை மறுதினம் முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பருவ மழை பற்றி மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை வழங்கி மக்களை தயார் நிலையில் உருவாக்க வேண்டும் அதேபோல கால்நடை வேளாண் பொருட்கள் போன்றவற்றை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் வடகிழக்கு பருவமழையின் போது பழுதடைந்த தனியார் கட்டிடங்கள் அரசு கட்டிடங்கள் போன்றவற்றை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வகுப்பறையை சீர் செய்யப்படாமல் பல பள்ளி மாணவர்கள் மரத்தின் நிழலில் அமர்ந்து பயின்று வருகின்றார்கள். இந்த நிலையில் கடந்த அம்மா ஆட்சி காலத்தில் எடப்பாடி யார் ஆட்சி காலத்தில் நவாடு திட்டத்தின் கீழ் புதிய பள்ளி கட்டிடங்கள் உருவாக்கப்பட்டது. இந்த ஒன்றரை வருட காலம் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 5,583 பள்ளிகள் சேதமடைந்ததாக அதிர்ச்சியான புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பற்றி முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் இதை கவனத்தில் கொண்டு சீர் செய்ய சிறப்பு நிதியை ஒதுக்க முதல்வர் முன் வருவாரா ஏற்கனவே வருடத்திற்கு 100 கோடி சீர் செய்ய ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது மழைக்காலம் என்ற காரணத்தினால் சேதமடைந்த இந்த கட்டிடங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை ஒதுக்கி தர முதல்வர் முன்வர வேண்டும். எடப்பாடி ஆட்சி காலத்தில் குடிமராம திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது அதன் மூலமாக தமிழகத்தில் நிலத்தடி நீர் உயர்ந்தது தற்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |