இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அதனால் பெரிய ரயில் நிலையங்களில் எப்போதுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அப்போது திருட்டு, கடத்தல் மற்றும் வன்முறை குற்றங்கள் அதிகம் நடப்பது வழக்கம் தான்.இதனை தடுக்கும் நோக்கத்தில் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குற்றப் பட்டியலில் இருப்போ ரயில் நிலையங்களில் நுழையும் போதே அவர்களின் படத்தோட எச்சரிக்கை விடுக்கும் ஹைடெக் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் ரயில் நிலையங்களின் நுழைவுப் பகுதிகள், டிக்கெட் முன்பதிவு, நடை மேடைகள் மற்றும் பல பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் கண்காணிப்பு கேமராக்களுடன் அதிநவீன சாஃப்ட்வேர் இணைக்கப்பட உள்ளதால் குற்றவாளிகள் பட்டியலில் இருப்போ ரயில் நிலைய வளாகத்திற்குள் நுழையும் போது அவர்களின் புகைப்படத்துடன் எச்சரிக்கை வரும்.
இது முதல் கட்டமாக பெங்களூரு உள்ளிட்ட மூன்று ரயில் நிலையங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் படிப்படியாக இந்த வசதி கொண்டுவரப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.