Categories
உலக செய்திகள்

ஈரானில் பரபரப்பு…. இணையதளங்கள் முடக்கம்…. ஹிஜாப்பிற்கு எதிராக தீவிர போராட்டம்….!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண், காவல்துறை காவலில் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதற்காக, ‘ஹிஜாப் படை’ என்ற தனி காவல்துறை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹிஜாப்பை முறைப்படி அணியாத அல்லது அதை அணியாத பெண்கள் மீது தனிப்படை வழக்குப் பதிவு செய்து, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றது.

கடந்த வாரம் ஹிஜாப் அணியாமல் சென்ற மாஷா அமினி (22) என்ற இளம்பெண் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்துறை காவலில் இருந்த அவர், மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் அவரை அடித்து கொன்று விட்டதாக, ஈரான் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு நீதி கேட்டும், ஹிஜாப்புக்கு எதிராகவும் ஈரான் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது, நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது. தலைநகர் டெக்ரான் உட்பட 13 நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றம் நிலவி வருகின்றது.

போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே பல இடங்களில் மோதல் நடக்கின்றது. இதில், இதுவரையில் 31 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதில், காவல்துறையினரும் அடங்குவார்கள். இருப்பினும், அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடைகளை விதித்து வருகின்றது. போராட்டம் பரவுவதை தடுக்க இணையதள சேவையும், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |