Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அரசின் பிணையில்லா கடன்”…. சில்லறை, மொத்த வணிகர்களுக்கும் வழங்க வேண்டும்…. தீர்மானம்…!!!!!!

சில்லரை மற்றும் மொத்த வணிகர்களுக்கு அரசின் பிணை இல்லா கடன் வழங்க வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இருக்கும் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினராக தொழிலாளர் கே.கே.பாலுசாமி கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் அரசின் பிணை இல்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாமல் சில்லறை மற்றும் மொத்த வணிகர்களும் கடன் வழங்க வேண்டும். தற்பொழுது பிணை இல்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இருக்கும் 12 சதவீத வட்டியை 9 சதவீதமாக குறைத்து வழங்க ஆவணம் செய்ய வேண்டும் எனவும் ஜிஎஸ்டி செலுத்தும் பொழுது செலானில் மதிப்பீட்டாளர்கள் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் என வங்கிகள் கூறுகின்றார்கள். இந்த நடைமுறை தொழில் வணிகர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆகையால் முகவர்கள் கையெழுத்திட்டாலே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |