மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். இதன் அடிப்படையில் தற்போது ஊழியர்களுக்கு 34 சதவீதம் வரை DA கிடைக்கிறது. 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் அரசின் அகவிலைப்படி அறிவிப்பின் மூலம் பயனடைவார்கள். அகவிலைப் படியை அடிப்படை சம்பளத்தோடு பெருக்கி கணக்கிடப்படுகிறது. இந்த அகவிலைப்படி கணக்கின்படி ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு பிறகு அரசு DA வை மாற்றிக் கொண்டே இருக்கிறது.
இதன் விளைவாக பணவீக்கத்தை சமாளிக்க ஊழியர்களுடைய சம்பளம் உயர்த்தப்படுகிறது. தற்போது நிதி ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதம் உயர்த்தப்பட்டு ஊழியர்கள் பெற்று வருகின்றனர் இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை – டிசம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி 34%ல் இருந்து 38% உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், இது குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) அளித்துள்ள விளக்கத்தில், “அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்று வரும் தகவல் உண்மையில்லை. இது குறித்து நிதியமைச்சகம் எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு முன் அறிவிப்பு வரலாம் என்பது அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு.